முடிவுரை
Conclusion
இக்கட்டுரை குர்ஆனிய சொற்பொழிவின் அற்புதமான ஒப்பிட இயலாத் தன்மையை, அதன் மிகச் சிறிய அத்தியாயமான அல்-கவ்ஸரை ஆராய்வதன் மூலம் வெளிப்படுத்தியது. இலக்கிய, மொழியியல் ஆய்வு, அரபு மொழியின் மூன்று வரிகளை மனிதரால் உருவாக்குவது சாத்தியமில்லை என்பதற்கு வலுவான சான்றை அளிக்கிறது. நபி (ﷺ) அவர்கள் எந்தச் சொல்லாட்சித் திறமையையும் வளர்த்துக்கொண்டவர் என அறியப்படவில்லை என்பதும், ஒரு கவிதை மேதையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் உண்மையாக இருக்கும்போது, அல்-கவ்ஸரை எவ்வாறு நியாயமாக விளக்க முடியும்?
This essay showcased the miraculous inimitability of the Qur’ānic discourse by analysing its shortest chapter, Al-Kawthar. The literary and linguistic analysis provides compelling evidence that it was not humanly possible to produce the three lines of Arabic. Given the fact that the Prophetصلى الله عليه وسلمwas not known to have cultivated any rhetorical gifts and he was not recognised as a poetic master, how can Al-Kawthar be reasonably explained?
வாசகருக்கு நினைவூட்டுவது முக்கியம்: அல்-கவ்ஸரில் குறைந்தது இருபத்தேழு மொழியியல், இலக்கிய உத்திகளுடன் 10 சொல் அலகுகள் மட்டுமே உள்ளன. அது பொருளை உகந்த நிலையில் தக்கவைத்துக்கொண்டு, பொருளை நோக்கிய ஓசைநயமும் ஈற்றுச்சீரும் கொண்டுள்ளது. இந்த அத்தியாயம் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அருளப்பட்டது; எனினும் அதன் அறிவுரையிலும் பொருளிலும் அது உலகளாவியது. அது எந்த நூலின் பகுதியோ அந்த நூலின் கருத்துகளோடும் முக்கியக் கருப்பொருள்களோடும் தொடர்புடையது; எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்நூலில் பயன்படுத்தப்படாத நான்கு சொற்களை இது பயன்படுத்துகிறது. இந்த அத்தியாயம் 10 சொல் அலகுகளைப் பயன்படுத்துகிறது; முழு அத்தியாயமும் 10 எழுத்துகளை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறது. அதற்கு முன் வரும் அத்தியாயத்தை பொருள் ரீதியாகச் சொல்லழகுடன் பிரதிபலிக்கிறது; எந்த மிகையான மொழிப் பயன்பாடும் இன்றி. நபி (ﷺ) அவர்கள் இந்த வசனத்தை எந்தத் திருத்தமும் பதிப்பாக்கமும் இன்றி பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், இத்தகைய இலக்கிய வெளிப்பாட்டை மனிதரால் உருவாக்கியிருக்க இயலாது என்ற முடிவு மேலும் வலுப்படுகிறது. இவை அனைத்தும், அதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை உருவாக்குமாறு குர்ஆன் மனிதகுலத்திற்குச் சவால் விடுகிறது என்ற சூழலில் அமைகின்றன. ஏழாம் நூற்றாண்டின் அக்காலத்திய அரபு மொழியியலாளர்கள் குர்ஆனின் சவாலுக்குப் பதிலளிக்க மிகச் சிறந்த நிலையில் இருந்தனர் என்றாலும், அவ்வாறு செய்யத் தவறினர்; மாறாக புறக்கணிப்பு, இழிவுபடுத்தல், போர், சித்திரவதை ஆகியவற்றை நாடினர்.