குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை
The Qur'an The Word Of God
குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகவும், முஹம்மத் (ﷺ) அவர்களின் நபித்துவத்தை நிரூபிக்கும் அற்புதமாகவும் இருந்தால், இந்த நூலை நாம் கவனமாக ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை சந்தேகமின்றி நிலைநாட்ட வேண்டும். முஹம்மத் (ﷺ) அவர்கள் காலத்து இணைவைக்கும் அரபிகள் அரபு மொழியின் சிறந்த கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருந்தனர் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். அக்காலத்தில் அவர்கள் ஒருவரையொருவர் மகிழ்விப்பதற்காக கவிதையும் உரைநடையும் எழுதுவதற்கும், அரபு மொழியைக் கற்பதற்கும் பாலைவனத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்தது. அரபு மொழியை அதன் சரளத்தன்மையுடனும் வெளிப்பாட்டின் ஆழத்துடனும் அவர்கள் பெரிதும் மதித்தனர்.
If the Qur'an is the word of God, and a miracle proving the Prophet-hood of Muhammad (pbuh) we must look carefully at this book and establish without doubt its authenticity. It is well known that the pagan Arabs of the time of Muhammad (pbuh) were great poets and writers of the Arabic language. It was common at the time for them to go into the dessert to study Arabic and write poetry and prose with which to entertain each other. They held the Arabic language with all its fluidity and depth of expression in great esteem.
முஹம்மத் (ﷺ) அவர்களுக்கு நாற்பதாவது வயதில் வஹீ வரத் தொடங்கியபோது, அதற்கு முன்போ அதற்குப் பின்போ இருந்த எதிலிருந்தும் வஹீயை வேறுபடுத்திக் காட்டியது அதன் மொழிநடையே ஆகும்.