ஒரு முஸ்லிமின் நம்பிக்கைகள்
The Beliefs Of A Muslim
ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் நம்ப வேண்டிய ஈமானின் ஆறு தூண்கள் இஸ்லாத்தில் உள்ளன.
Islam has six pillars of faith that every Muslim must believe in.
1. அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை: முஸ்லிம்கள் ஒருவனும், ஒப்புவமையற்றவனுமான அல்லாஹ்வை நம்புகின்றனர்; அவன் ஒருவனே அண்டம் முழுவதையும் படைத்து, அதில் உள்ள அனைத்துக் காரியங்களையும் நிர்வகிக்கிறான்.
1. Belief in Allah: Muslims believe in one, incomparable God who, alone, created the entire universe and controls all affairs within it.
உயிர் கொடுப்பவனும், மரணிக்கச் செய்பவனும் அவன் ஒருவனே; அனைத்துக் காரியங்களும் அவனுடைய கரத்திலேயே உள்ளன. அவனுக்கு மகன்களோ மகள்களோ இல்லை; சகோதரர்களோ, தாயோ, தந்தையோ, மனைவியோ இல்லை. அல்லாஹ்வுக்கு ஒப்பும் இல்லை, நிகரும் இல்லை; எனவே, வணங்கப்படத் தகுதியுடையவன் அவன் ஒருவனே. அவனைத் தவிர மற்றவருக்கு வணக்கத்தின் எந்த வகையையேனும் செலுத்துவது அனைத்துப் பாவங்களிலும் மிகப் பெரியது. முஸ்லிம்கள் நபிமார்களையோ, மூதாதையர்களையோ, மரங்கள், கற்கள், சிலைகள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், அல்லது படைப்புகளில் உள்ள வேறெதனையுமோ வணங்குவதில்லை. முஸ்லிம்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றனர்; இடைத்தரகர் எதுவுமின்றி நேரடியாக அவனிடமே பிரார்த்திக்கின்றனர்.